தெரிந்து கொள்வோம் டிரைவர் இல்லாத கார்கள் 

சீனாவை சேர்ந்த நிறுவனம் டிரைவர் இல்லாத தானியங்கி காரை இயக்கியுள்ளது. மொத்தம் 2 கார்கள் இவ்வித சோதனை முயற்சியில் சாலைகளில் இறக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மாறுபட்ட சூழலில் இந்த வகை கார் எவ்விதம் செயல்படுகிறது என்பதை சோதிக்கப்போவதாக அங்குள்ள ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


நகர்ப்புற சாலைகளில் இந்தக்கார் எவ்வித சிரமமும் இன்றி செயல்படும். இருப்பினும் நகர் பகுதிகளில் நெடுஞ்சாலை மற்றும் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்டவற்றை உணர்த்த இந்த காருக்கு மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. எனவே இந்த விஷயங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 

இந்தக் காரில் உள்ள சென்சார் மூலமான தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது. இவை அனைத்தும் சிறப்பாக செயல்படுவது உறுதியான பிறகே அதிக எண்ணிக்கையில் இத்தகைய காரை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கூகுள் கார்கள் சாலைகளில் களமிறங்கும் முன்பாக தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை சோதனை ரீதியில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயண தூரத்தை அவை முடித்துள்ளன. கூகுள் கார்களும் மனிதர்களின் உதவியின்றி இதுவரை நடைபெற்ற சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. 

உலகம் முழுவதும் டிரைவர் இல்லாத கார்கள் தயாரிக்கும் பணியில் 20 முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எதிர்காலத்தில் டிரைவர் இல்லாத கார்கள்தான் சாலையை ஆக்கிரமித்திருக்கும். இதனால் மனிதத்தவறுகளால் ஏற்படும் விபத்துகள் குறையும் என்று நம்பலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!