தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 4 March 2022

தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஆண், பெண், மற்றும் திருநங்கை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இதற்கான விண்ணப்ப மனுக்களை இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 7-4-2022 வரை விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம். முதன் முதலாக தமிழ்மொழி தகுதி தேர்வு அரசின் உரிய வழிகாட்டுதலின் படி நடத்தப்படும். . 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தேவைப்படும் உரிய விவரங்களை இந்த உதவி மையங்களில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதற்காக 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899 போன்ற சீருடை பணியாளர் தேர்வாணய கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment