தினம் ஒரு தகவல் ‘நீர்முள்ளி’யின் மருத்துவ குணங்கள் - EDUNTZ

Latest

Search here!

Friday, 4 March 2022

தினம் ஒரு தகவல் ‘நீர்முள்ளி’யின் மருத்துவ குணங்கள்

‘நீர்முள்ளி’யின் மருத்துவ குணங்கள் சிற்றோடைக்கு அருகில், வயல்வரப்புகளிலும் குளத்துக் கரையிலும் காணப்படும் தாவரமே நீர்முள்ளி. ‘முப்பரிமாணத்தில் நீண்ட கூரிய முட்களையும் ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடைய மலர்களையும் இது கொண்டிருக்கும். 


நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்கள் கொண்ட செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர் வந்தது. ஈட்டி வடிவ இலைகளையும் ஊதா நிற மலர்களையும் பழுப்பு நிற விதைகளையும் கொண்ட தாவரம். பாதாம், முந்திரி, கசகசா, நீர்முள்ளி விதை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக் கொண்டு. 

இதைப் பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து சுடச்சுடத் தயாரிக்கப்படும் ‘நீர்முள்ளி பால்’ உடலுக்கான உற்சாக பானம் ஆகும். நீர்முள்ளி இலைகளையும் விதைகளையும் ஆவியில் வேகவைத்து, பூண்டு, மஞ்சள், கடுகு சேர்த்து குழம்புப் பக்குவத்தில் சமைத்துச் சாப்பிட, சிறுநீர்ப்பாதைத் தொற்று, நீரடைப்பு போன்றவை விலகி சீராய் சிறுநீர் கழியும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. 

 நீர்முள்ளி விதைகளைத் தண்ணீரில் ஊறவைக்க, பசை போன்ற தன்மையை அடையும். அதில் தேனும் நெய்யும் தனித்தனியே சேர்த்து ‘நீர்முள்ளி விதை அல்வா’ தயார் செய்து திருமணமான ஆண்களுக்கு சிறப்பு சிற்றுண்டியாக வழங்கலாம். பல்வேறு காரணங்களால் குறையும் விந்தணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் நீந்தும் திறனை அதிகரிக்க நீர்முள்ளி விதை சிறந்தது. நீர்முள்ளி முழு தாவரத்தையும் உலர்த்தி வாழைத்தண்டு சாற்றில் நீண்ட நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி வீதம் சுவைத்து வர, ரத்த சோகை குறைந்து, உடல்வீக்கம் குறையும். வலிநிவாரணி, வீக்கமுறுக்கி, புழுக்கொல்லியாக இதன் விதைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு, ரத்தத்தில் அதிகரித்திருக்கும் உப்புக்களின் அளவைக் கணிசமாக குறைக்கும் சூட்சுமம் கொண்டவை, இந்த நீர்முள்ளி விதைகள்.

No comments:

Post a Comment