ரிசர்வ் வங்கியில் வேலை
ரிசர்வ் வங்கியில் வேலை
ரிசர்வ் வங்கியில் ‘கிரேடு பி’ பிரிவுகளில் 294 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிரேடு பி ஜெனரல் அதிகாரி பணி இடத்துக்கு பட்டப்படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சியோ அல்லது முதுகலை படிப்பில் 55 சதவீதம் தேர்ச்சியோ பெற்றிருக்க வேண்டும்.
கிரேடு பி, டி.இ.பி.ஆர் அதிகாரி பணிக்கு முதுகலைப்படிப்பில் பொருளாதாரம்/ பி.ஜி.டி.எம்/ எம்.பி.ஏ. பைனான்ஸ் போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கிரேடு பி, டி.எஸ்.ஐ.எம். பணிக்கு முதுகலை படிப்பில் கணிதம், புள்ளியியல் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20-28 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். DOWNLOAD SHORT NOTICE HERE
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-4-2022. மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
No comments:
Post a Comment