பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600006.
மாநில திட்ட இயக்ககம்
அனுப்புநர்
பெறுநர்
திரு இரா. சுதன், இ.ஆ.ப.,
முதன்மை கல்வி அலுவலர்,
மாநில திட்ட இயக்குநர்,
அனைத்து மாவட்டம்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம்,
சென்னை 600006.
ந.க.எண்.1988/நிதிப்பிரிவு/ஒபக/2021-3, நாள் 17.03.2022.
அய்யா / அம்மா,
பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் -
அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த
அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை
பணப்பரிவர்த்தனை குறித்தவற்றிற்கு மட்டும்
திருத்தங்கள் - சார்பு.
பார்வை: இவ்வலுவலக ந.க.எண்.1988/நிதிப்பிரிவு/ஒபக/
2021-1 மற்றும் 2, நாள் 27.08.2021 மற்றும்
28.08.2021.
...
பார்வையில் உள்ள கடிதங்களின் மீது தங்களின் கவனத்தை ஈர்க்க
விழைகிறேன்.
2. 08.03.2022 அன்று நடைபெற்ற அனைத்து மாவட்ட கல்வி
அலுவலர்கள் கூட்டத்தில், பள்ளிகளில்
ஏற்படும்
அவசர
சில்லரைச்
செலவினத்தினை மேற்கொள்ள தனக்காக (self) என்று தற்போது உள்ள
ரூ.4,000/-த்தினை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
3. அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, ஒவ்வொரு
ஆண்டும் கவனம் மற்றும் பாதுகாப்பு தலைப்பின் கீழ் (under safety and
security grant) மற்றும் கூட்டு மானியம் என்ற தலைப்பின் கீழ் (under
composite grant), அதாவது மேலே தெரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு
தலைப்பின் கீழ், பள்ளிக்கூடத்திற்கு விடுவிக்கப்படும் தொகையில், தனக்காக
(self) என்று 1/5 (ஐந்தில் ஒரு பங்கிற்கு மிகாமல்), அவசர சில்லரைச் செலவினம்
மேற்கொள்ளும் பொருட்டு, மறு உத்திரவு வரும் வரையிலான காலத்திற்கு
பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதற்காக
ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் நடைமுறையை கடைபிடிக்கக் கூடாது என்று
அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment