வருகிற 21-ந் தேதி வரை ‘டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 18 April 2022

வருகிற 21-ந் தேதி வரை ‘டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வருகிற 21-ந் தேதி வரை ‘டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 


2022-23-ம் கல்வியாண்டுக்கான எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) எழுதவேண்டும் என்ற அறிவிப்பை, சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. 

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கு கடைசி தேதி 18-ந் தேதி (இன்று) என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், ‘டான்செட்' நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் முறையில் பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 21-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை ‘டான்செட்' செயலாளரும், அண்ணா பல்கலைக்கழக நுழைவு தேர்வுகள் மையத்தின் இயக்குனருமான டி.ஸ்ரீதரன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment