275 கல்லூரி விடுதிகளில் ரூ.2.20 கோடியில் இணையவழி நூலகம் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 23 April 2022

275 கல்லூரி விடுதிகளில் ரூ.2.20 கோடியில் இணையவழி நூலகம் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

275 கல்லூரி விடுதிகளில் ரூ.2.20 கோடியில் இணையவழி நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதம் முடிந்ததும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியதாவது:- 

 இணையவழி நூலகம் 275 கல்லூரி விடுதிகளில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் இணையவழி நூலகம் அமைக்கப்படும். மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை மறுசீரமைத்து, தேவைப்படும் இடங்களில் 15 கல்லூரி விடுதிகள் ரூ.1 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரம் செலவில் தொடங்கப்படும். பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியர் தங்க அனுமதி அளிக்கப்படும். இதற்காக ரூ.48 லட்சத்து 36 ஆயிரம் வழங்கப்படும். சொந்த கட்டிடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு ரூ.6 கோடியே 75 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும். மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 3 கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் செலவில் உண்டு உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்படும். 

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக ரூ.1 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரம் செலவில் நிலை உயர்த்தப்படும். சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் ரூ.75 லட்சம் செலவில் ஏற்படுத்தித்தரப்படும். தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 ஆயத்த ஆடை அலகுகள் ரூ.75 லட்சம் செலவில் அமைத்துத்தரப்படும். 

 இலவச மருத்துவ பரிசோதனை 11-ம் வகுப்பு பயிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவ, மாணவியரை மாநில அளவில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ரூ.49 லட்சத்து 53 ஆயிரம் வழங்கப்படும். விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் 3 முறை இலவச மருத்துவ பரிசோதனை செய்வதற்கென வழங்கப்பட்டுவரும் இடைநிகழ் செலவினம் ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக ரூ.32 லட்சத்து 98 ஆயிரம் செலவில் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment