கிராமப்புறங்களில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 23 April 2022

கிராமப்புறங்களில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

தமிழக சட்டசபையில் நேற்று சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அத்துறையின் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது:- கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். 

 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் பொருண்மை இத்துறை மூலம் செயல்படுத்தப்படும். சென்னையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான அடக்க ஸ்தலங்கள் அமைக்க பின்பற்றப்படும் நிபந்தனைகள் தளர்வு செய்யப்படும். மாநில அளவில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ந்தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கொண்டாடப்படும். உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment