பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 68 முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 27 April 2022

பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 68 முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழ்நாடுபள்ளிக்கல்வி ஆணையரக இணைஇயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.13078/டபிள்யு3/82/2022 நாள்.27.04.2022 

பொருள்: 

தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப் பணி-சென்னை உயர்நீதிமன்றவழக்கு W.P.No.3081/2022 கிருஷ்ணகிரி மாவட்டம். M.சந்திரசேகரன் மற்றும் 68 நபர்கள் மற்றும் W.P.No.3122/2022 திரு.கந்தன் மற்றும் உஷாராணி ஆகியோரால் 2021-2022ஆம் ஆண்டுபொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது சென்னை உயர்நீதிமன்ற 15.03.2022 நாளிட்ட தீர்ப்பாணையை செயல்படுத்துதல் - சார்ந்து. 

பார்வை: 

1. அரசாணை நிலை எண்.176. பள்ளிக்கல்வித் துறை நாள்.17.12.2021. 

2. அரசாணை நிலை எண்.15. பள்ளிக்கல்வித் துறை நாள்.10.02.2022 

3. சென்னை உயர்நீதிமன்ற வழக்கு W.P.No.3081, 3089 மற்றும் 3122/2022ல் வழங்கப்பட்ட திர்ப்பாணை நாள்.15.03.2022. 

4. சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் அவர்களின் சட்டக் கருத்து 333/2022/EDN(S), நாள்.28.03.2022. 

கிருஷ்ணகிரி மாவட்டம், M.சந்திரசேகரன் மற்றும் 68 நபர்களால் (W.P.No.3081/2022) மற்றும் திண்டுக்கல் மாவட்டம், திரு.C.கந்தன் மற்றும் உஷாராணி ஆகியோரால் (W.P.No.3122/2022]2021-2022ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 15.03.2022 நாளிட்ட தீர்ப்பாணையை செயல்படுத்துதல் தொடர்பாக சிறப்பு மாறுதல் கலந்தாய்வு 28.04.2022 அன்று பிற்பகல் 2 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மனுதாரரை கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ஓம்/-(எம்.இராமசாமி) இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) பெறுநர் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள். சேலம், இராணிப்பேட்டை, ஈரோடு. கிருஷ்ணகிரி, நீலகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கரூர். இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, திருப்பூர், திருச்சி, திருவண்ணாமலை, கோவை ,பெரம்பலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி. நகல் 

தகவல் மேலாண்மை முகமை (EMIS), சென்னை-6. Pennsneur ton EW11-2022 and 029 2022 )

No comments:

Post a Comment