மே மாதம் நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை மேற்பார்வையிட பள்ளிக்கல்வி துறை இயக்ககங்களை சேர்ந்த அதிகாரிகள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் தமிழகத்தின் 37 கல்வி மாவட்டங்களுக்கு நியமனம் செய்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன் தூத்துக்குடி மாவட்டத்துக்கும், தமிழ்நாடு பாடல்நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டி.மணிகண்டன் கோவை மாவட்டத்துக்கும், அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராமவர்மா சென்னை மாவட்டத்துக்கும், தொடக்க கல்வி இயக்குனர் க.அறிவொளி செங்கல்பட்டு மாவட்டத்துக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர்-1 வி.சி.ராமேஸ்வரமுருகன் காஞ்சீபுரம் மாவட்டத்துக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் ச.கண்ணப்பன் திருச்சி மாவட்டத்துக்கும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பூ.ஆ.நரேஷ் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் பி.குமார் நாமக்கல் மாவட்டத்துக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனர் ஆ.அனிதா கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் என 37 மாவட்டங்களுக்கு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமனம் செய்யப்பட்டு இருக்கும் அதிகாரிகள் எதிர்பாராத சூழ்நிலையில் தேர்வுப்பணிகளை மேற்பார்வையிட செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக வேறு அலுவலரை நியமனம் செய்யும் அதிகாரம் அரசு தேர்வுகள் இயக்குனருக்கு வழங்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment