அரசு மானியம் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்தி தபால் துறை எச்சரிக்கை - EDUNTZ

Latest

Search here!

Monday, 25 April 2022

அரசு மானியம் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்தி தபால் துறை எச்சரிக்கை

இந்திய தபால் துறை மூலமாக அரசு மானியம் வழங்கப்படுவதாக முகநூல், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் போலியானது. இவ்வழிகள் மூலம் போனஸ் மற்றும் பரிசுகள் வழங்கும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் இந்திய தபால் துறை ஈடுபடுவதில்லை. 

 எனவே பொதுமக்கள் இந்த போலியான செய்திகளை நம்பி வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு முதன்மை தபால் துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment