லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயப் பிரச்சனைகள்! - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 3 April 2022

லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயப் பிரச்சனைகள்!

லிப்ஸ்டிக்குகள் மற்றும் நாம் கைகழுவப் பயன்படுத்தும் திரவப்பொருட்களில் சிலவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மை இருதயப்பிரச்சனைகளை தோற்றுவிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் இது பற்றிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் (வசiஉடழளயn) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது. 


இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக இந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எலிகளில் டிரைக்ளோசனைப் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொண்ட போது 20 நிமிடத்திலேயே எலிகளில் இருதயச் செயல்பாடுகள் படிபடிப்படியாக குறைந்ததை இவர்கள் கண்டனர்.

  இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும் எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட டிரைக்ளோசன் அளவுகள் அதிகம், ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உள்ள இந்த ரசாயனத்தின் அளவு மிகக்குறைவே என்று இந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்தனர். 

டிரைக்ளோசன் பற்றி ஏதோ இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ரசாயனத்திற்கும் தைராய்டு பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தசைகளில் இதன் தாக்க்ம் பற்றி இப்போதுதான் ஆராய்ப்படுகிறது. மருதுதுவ மனைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாக்டீரியா நுண்ணுயிரித் தாக்கத்தை இது தடுப்ப்தாகவே டாக்டர்கள் கருதுகின்றனர். 


ஆனால் கலிபோர்னியா விஞ்ஞானிகளோ இந்த ரசாயனத்தின் தாக்க்ம் உடல் உறுப்புகளிலும் விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். டிரைக்ளோசன் அனைத்திலும் உள்ளது, சுற்றுப்புறச் சூழலில் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கே நன்மை பயப்பதல்ல என்று கூறுகின்றனர். நல்ல இருதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இந்த ரசாயனத்தினால் 10மூ இருதயச் செயல்பாடு குறைந்தால் தெரியாது. 

ஆனால் இருதயப்பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 10மூ செயல்பாட்டுக் குறைவு என்பது ஆபத்தல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பரிசோதனையில் எலிகளுக்கு டிரைக்ளோசன் ஏற்றிய 20வது நிமிடத்தில் அதன் இருதய செயல்பாட்டில் குறிப்பிடத்தகுந்த இடரபாடுகள் தெரிந்தது. ஆகவே பெண்களே உஷார்! லிப்ஸ்டிக் போட்டால்தான் அழகு கூடுகிறது என்பது முதலில் ஒரு மாயை!

No comments:

Post a Comment