உறவுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள் 


வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந் திருவிழாக்கள், உறவினர் வருகை என்று கோடைகாலம் குதூகலமாகவே இருக்கும். எப்பொழுதும் வேலை, தொழில் என்று பரபரப் பாக இருப்பவர்கள், இந்த நேரத்திலாவது சற்று இடைவெளி கொடுத்து குடும்பத்தோடும், உறவு களோடும் மனம் விட்டுப் பேசி மகிழ்வதற்கு முயற்சி செய்யலாம். 

நாள் முழுவதும் டிஜிட்டல் சாதனங்களின் பிடியில் சிக்கிக்கொண்டு இருக்காமல், மாலை வேளைகளில் மொட்டை மாடியில் குடும்பத் தோடு அமர்ந்து தேநீர் பருகலாம். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அருகில் இருக்கும் வழிபாட்டுத் தலத்துக்குச் சென்று வரலாம். சொந்த ஊரில் வசிக்கும் உறவுகளிடம் தொலைபேசியில் உரை யாடி மகிழலாம். 

இவ்வாறு குடும்பத்தினருக்கும், உறவு களுக்கும், நண்பர்களுக்கும் நேரம் செலவிடும் போது, ஒருவர் மீது மற்றொருவர் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரிக்கும். உணர்ச்சி ரீதியான நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் தகவல் தொடர்பு திறன்கள் மேம்படும். ஒற்றுமை உணர்வு மேலோங்கும். பிள்ளைகளுக்கு பெற்றோர் மீதான மரியாதை அதிகமாகும்.

Post a Comment

Previous Post Next Post

Search here!