ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 70 சதவீத இந்தியர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இல்லை என்றால் வியாபாரம் குறைந்துவிடுமோ என்பதன் காரணமாக செயலியை குறி வைத்திருக்கின்றன, பல நிறுவனங்கள். 

சில வருடங்களுக்கு முன்பு இணையதளம் ஆரம்பிப்பதையே பெரிய வேலையாக நிறுவனங்கள் கருதின. இப்போது இணையதளத்தை தாண்டி ஒவ்வொரு நிறுவனமும் நேரடியாக செயலி (ஆப்) மூலம் வாடிக்கையாளர்களுடன் இணைய விரும்புகிறார்கள். இதுதவிர பெரும்பாலான நிறுவனங்கள் இணையதள விற்பனையை காட்டிலும் செயலி மூலம் விற்பனை செய்யவே விரும்புகின்றன. 

அதையே பிரதானப்படுத்தி வருகின்றன. இதன் மூலம் நிர்வாக செலவுகளை அவர்களால் குறைக்க முடியும். நிறுவனங்கள் மெல்ல மெல்ல செயலிக்கு மாறுவதற்கு ஆரம்பித்தாலும் மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே? இந்த செயலி இத்தனை லட்சம் டவுன்லோடு என்பது மட்டுமே வெளியே தெரியவரும். ஆனால் டவுன்லோட் செய்யப்படும் அதே வேகத்தில் ‘அன்இன்ஸ்டாலும்’ நடக்கிறது என்பது வெளியே தெரியாது. சுமார் 30 சதவீதம் வரை அன் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. 

அதாவது ஒரு செயலியை 100 பேர் டவுன்லோட் செய்திருக்கிறார்கள் என்றால் 30 நபர்கள் வரை அதை அன்இன்ஸ்டால் செய்திருப்பார்கள். தவிர குறிப்பிட்ட சதவீத நபர்கள் மட்டுமே அதனை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post

Search here!