'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 1 மதிப்பெண் தேவையா? - EDUNTZ

Latest

Search Here!

Friday, 15 April 2022

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 1 மதிப்பெண் தேவையா?

 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 1 மதிப்பெண் தேவையா?



'நீட்' தேர்வு விண்ணப்பத்தில் பிளஸ் 1 மதிப்பெண்கள் இல்லாமல் பதிவு செய்யுமாறு, மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில், ஏப்., 6ல் துவங்கியது. மே 6ம் தேதி விண்ணப்ப பதிவு; மே 7ல் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்.


இந்நிலையில், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், மாணவர்களின் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான விபரங்களை பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதாவிட்டாலும், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கு மட்டும்அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு, தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 


பிளஸ் 2வுக்கு இனி தான் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் .எனவே, 10ம் வகுப்புக்கு மட்டும், நீட் தேர்வு விண்ணப்பத்தில் மதிப்பெண் பதிவு செய்ய முடியும். மற்ற வகுப்புகளுக்கு மதிப்பெண் பதிவு செய்வது எப்படி என, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, நீட் பயிற்சி மையங்கள், அரசு பள்ளிகளின் நீட் ஒருங்கிணைப்பாளர்கள் வழியே வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்து விட்டு, பிளஸ் 1,பிளஸ் 2வுக்கு, 'நாட் அப்ளிக்கபிள்' என்ற குறிப்பை தேர்வு செய்து கொண்டால், அதில் மதிப்பெண்கள் பதிவிட தேவையில்லை என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment