மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 18 April 2022

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில், மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, முதல்வரால் மாநில இளைஞர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்தாண்டு விருது பெற தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருது 15 - 35 வயது வரை உள்ள, தலா மூன்று ஆண்கள், பெண்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுடன், 1 லட்சம் ரூபாய் ரொக்கம்; பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.நடப்பாண்டுக்கான விண்ணப்பங்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.inல் 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment