உணவைப் பார்த்தாலே வெறுப்பு, சாப்பிட்டாலோ உடனே வாந்தி, அல்லது இந்த நிலைக்கு நேர்மாறாக தீராத, அடங்காத பசி இந்த இரண்டு நோய்க்கூறுகளுமே கருத்தரிப்பதை தாமதப்படுத்துகிறது என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் சுமார் 11,000 பெண்களிடன் வினா-விடை மாதிரிகளை வழங்கி அவர்கள் கொடுத்த பதில்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி உணவைக் கண்டாலே வெறுப்பு மற்றும் தீராப்பசி, அகோரப்பசி ஆகியவை உள்ள பெண்களுக்கு கர்த்தரிப்பு 6 மாத காலம் தள்ளிப்போவது தெரியவந்துள்ளது.
ஆனாலும் இந்த உணவுக் கோளாறுகள் உள்ள பெண்கள் கருத்தரிக்க 12 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவின் மீது வெறுப்பு அல்லது தீராப்பசி ஆகிய நோய்க்குறுகள் உள்ள பெண்கள் எப்போதும் சிலபல சிகைச்சைகளுக்கு பிறகே கருத்தரிக்க முடிந்துள்ளது.
மேலும் உணவு வெறுப்பு உள்ள பெண்கள் தாங்களால் கருத்தரிக்கவே முடியாது என்ற மன ரீதியான தடைக்கு ஆளாகின்றனர். இதனாலும் தாமதம் ஏற்படுகிறது.
எனவே பெண்கள் கருத்தரிக்கக் காரணமான விதைகளைப் பற்றிய ஆய்வுக்கு முன் மருத்துவர்கள் பெண்களின் உணவுப்பழக்கவழக்கங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment