இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களை வேலை வாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில், இரண்டு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, அண்ணா பல்கலையில் வரும் 22ல் துவங்குகிறது. 


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களை, படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கு ஏற்ப தயாராகும் வகையில், திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக, அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பும், அண்ணா பல்கலையும் இணைந்து, வரும் 22, 23ம் தேதிகளில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடத்துகின்றன. நிறைவு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். 


நேரிலும், 'ஆன்லைனிலும்' மொத்தம் 7,000 மாணவர்கள் பங்கேற்க உள்ள கருத்தரங்கில், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகள் அடங்கிய கண்காட்சி நடத்தப்படுகிறது. சிறந்த படைப்பு மற்றும் திறன் மிகுந்த மாணவர்களுக்கு, தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட உள்ளதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!