கடந்த ஆண்டை விட ‘நீட்' தேர்வுக்கான கட்டணம் அதிகரிப்பு 2022-23-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை, நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதன்படி, நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி கடைசி நாள் ஆகும். 


நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருந்த அந்த அறிவிப்பில், நீட் தேர்வுக்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,600-ம், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு ரூ.1,500-ம், எஸ்.சி., எஸ்.டி., திருநங்கைகளுக்கு ரூ.900-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனுடன் கூடுதலாக செயலாக்க கட்டணம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றை, தேர்வர்கள் தனியாக செலுத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. 


இந்நிலையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு கட்டணம், கடந்த ஆண்டை விட அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கு ரூ.1,500-ம், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு ரூ.1,400-ம், எஸ்.சி., எஸ்.டி., திருநங்கைகளுக்கு ரூ.800-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.100 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!