தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண்.069381/கே/இ1/2018, நாள். 26.04.2022.
பொருள்:
பள்ளிக் கல்வி - அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020 க்கு
முன்னர் பெற்ற உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதிய
உயர்வு - சார்பாக அரசுக்கு கூடுதல் விவரங்கள் அனுப்ப
கோருதல் - சார்பு.
பார்வை: 1. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.069381/கே/இ1/2018, நாள். 20.02.2021.
2. அரசுக் கடிதம் எண். 6192/பக5(2)/2021-2, நாள்:
07.04.2022.
பார்வை (2) ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் கோரியுள்ள
விவரங்களை அரசுக்கு அனுப்ப ஏதுவாக ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து
ஏற்கெனவே கருத்துரு அனுப்பப்பட்டவர்களின் விவரங்களை மட்டும்
வருவாய் மாவட்ட வாரியாக ஆசிரியர்கள் வகிக்கும் பதவி வாரியாக
பிரித்து தனித்தனியாக இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்க்கண்ட
படிவத்தில் பூர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் அனுப்பிவைக்குமாறு
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நகல்களை
தலைமையாசிரியர் ஒப்புதலுடன் 2 நகல்கள் அனுப்பிவைக்குமாறு
அனைத்து
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்படுகிறது.
இதனை மிகவும் அவசரமாகக் கருதவும்.
இணைப்பு : படிவம்
ஓம்/-முனைவர் வெ.ஜெயக்குமார்
பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
(தொழிற்கல்வி)
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
No comments:
Post a Comment