செய்முறைத்தேர்வுக்கான காலஅளவு குறைப்பு


11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளை, எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காமல் நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேர்வுகளுக்கான சில விதிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 * செய்முறைத் தேர்வுகள் 4 பிரிவுகளாக பிரித்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைக்குள் நடத்தப்பட வேண்டும். ஒரு பிரிவுக்கு 25 முதல் 30 மாணவர்கள் வரை தேர்வு எழுதலாம். 

 * ஒரு பாடத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 120 மற்றும் அதற்கு கீழ் இருப்பின் ஒரே நாளில் அப்பாடத்தின் செய்முறைத் தேர்வு முடிக்கப்பட வேண்டும். 

 * செய்முறைத் தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது (ஏற்கனவே 3 மணி நேரமாக இருந்தது). 

 * செய்முறைத் தேர்வு நடைபெறும் நாட்களில் விடைத்தாள்கள் அன்றே திருத்தப்பட்டு. மதிப்பெண் பட்டியல் முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை முதன்மை கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Search here!