01.06.2022 முதல் 31.12.2023 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 17 May 2022

01.06.2022 முதல் 31.12.2023 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

01.06.2022 முதல் 31.12.2023 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண். 04201/ டபிள்யு3/இ3/2021, நாள். .05.2022 

பொருள் :- 

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்பணி - 01.06.2022 முதல் 31.12.2023 முடிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நிலை - 1 மற்றும் கணினி தொழிற்கல்வி (நிலை 1) ஆகிய ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற உள்ளவர்களின் விவரம், பணியிடம் மற்றும் பாட வாரியாக அனுப்பக் கோருதல் - தொடர்பாக. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 மற்றும் கணினி தொழிற்கல்வி (நிலை 1) பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் 01.06.2022 முதல் 31.12.2023 மூடிய ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிட வாரியாக, பாடவாரியாக, தனித்தனி தாளில் Legal Excel Sheet ல் செய்து dsew3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.05.2022 மாலை 3.00 மணிக்குள் தவறாமல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தட்டச்சு இணைப்பு : படிவம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர். (மேல்நிலைக்கல்வி) பெறுநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.




No comments:

Post a Comment