+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? - EDUNTZ

Latest

Search here!

Sunday, 22 May 2022

+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?

இன்ஜினிரிங் படித்தால் அவர்கள் படித்த துறையில் மட்டுமே வேலை கிடைக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் பல லட்சத்துக்கு மேற்பட்ட பொறியாளர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலைக்காக போராட வேண்டிய சூழ்நிலையே மிஞ்சுகிறது. 


ஆனால், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை, அவர்கள் படிக்கும் துறை மட்டுமல்லாமல் எந்த துறையிலும் நிச்சயம் வேலைவாய்ப்பு உண்டு. அந்தவகையில், 12 ஆம் வகுப்பில் வணிகவியலை பாடமாக படித்தவர்கள் அடுத்த கட்டமாக டிகிரி, புரோபோஷனல் கோர்ஸ், இன்டெர்நேஷனல் கோர்ஸ் என மூன்று விதமான படிப்பு முறைகளை தேர்தேடுக்கலாம். இந்தவகையான படிப்புகள் குறித்து முழுமையாக பார்க்கலாம். டிகிரியை எடுத்து கொண்டோமானல், பிகாம், பிபிஏ, பிஏ எக்னாமிக்ஸ், எல்எல்பி உள்ளிட்ட பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. 

🔹 பி.காம்., (B.Com. - Bachelor of Commerce) படிக்க என்ன தகுதிகள் தேவை: மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும். இந்தவகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம். வேலை வாய்ப்பு: பி.காம்., முடிக்கும் பட்சத்தில் கண்டிப்பான முறையில் வேலை வாய்ப்பை பெற முடியும். இதை முடிப்பதின் மூலம் எம்.காம்., படிக்க தகுதி பெறுவதோடு, வணிக வளாகங்கள், போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியலாம். ஆரம்பகட்ட ஊதியமாக 25,000 முதல் பெற முடியும். 

🔹 பி.பி.ஏ., (BBA - Bachelor of Business Administration) படிக்க என்ன தகுதிகள் தேவை: மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ரூ.2-3 லட்சம் வரை ஊதியமாக பெற முடியும். மேலும் அடுத்த கட்டமாக எம்.பி.ஏ., எனும் உயர்கல்வி கற்க முடியும். இது நாம் தேர்ந்தேடுக்கும் பாடப்பிரிவைப் பொறுத்து ஒரு ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இதை படித்து முடிப்பதின் மூலம் சொந்தமாக தொழில் தொடங்குவதோடு, பல்வேறு முண்ணனி நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு உண்டு. குறைந்த பட்சமாக 2-3 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். மேலும் இதைக்கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் முயற்சி செய்யலாம். 

🔹 இளங்கலை பொருளாதாரம்/ பி.ஏ.,(எக்னாமிக்ஸ்) படிக்க என்ன தகுதிகள் தேவை: பி.ஏ., எக்னாமிக்ஸ் என்பது பேச்சு வழக்கில் பார்த்தால் மிகச்சாதரணமான படிப்பாக தெரிந்தாலும், நாட்டின் பொருளாதரத்தையே அலசி ஆராயும் படிப்பாகும். இதை முடிக்கும் பட்சத்தில் எம்.காம்., எம்.பி.ஏ., போன்ற மேற் படிப்புகளை படிக்க வழி செய்வதோடு, சிவில் சர்வீஸ் தேர்வுகளையும் எழுதலாம். ஊதியமாக ஆண்டுக்கு ரூ.2-3 லட்சம் வரை பெறலாம். 

🔹 எல்.எல்.பி., (LLB - Bachelor of Laws) படிக்க என்ன தகுதிகள் தேவை: இதை படிக்க 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மூன்று ஆண்டு படிப்பான இதை முடிக்கும் பட்சத்தில் ரூ.5-6 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். லீகல் அட்வைசர், வழக்கறிஞர் போன்ற பணிகளோடு பல்வேறு முண்ணனி வணிக நிறுவனங்களிலும் பணியாற்றலாம். 

🔹 புரோபோஷனல் கோர்ஸ் எனும் தொழில்முறை படிப்புகள்: வணிகவியலை படித்த மாணவர்களுக்கென சில சிறப்பு படிப்புகள் உள்ளன. அவை சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ்., இதைப்பயில 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 

🔹 சி.ஏ. எனும் பட்டயக்கடக்காளர் (Chartered Accountancy (CA)): 12 ஆம் முடிக்கும் பட்சத்தில் நேரடியாக சி.ஏ., படிப்பின் நிலை ஒன்றில் நுழைந்து படிக்கலாம். டிகிரி முடித்திருந்தால் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டாவது நிலையில் நுழையலாம். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 4.5 ஆண்டுகளும், டிகிரி முடித்தவர்கள் 3.5 ஆண்டுகளும் படிக்க வேண்டும். இதை முடிக்கும் பட்சத்தில் ஊதியமாக ரூ.8-25 லட்சம் வரை பெறலாம். வேலை வாய்ப்பு: சி.ஏ., பட்டதாரிகளுக்கு சென்ற இடமெல்லாம் சிவப்பு கம்பள வரவேற்புதான். அரசு நிறுவனங்கள், சொந்த தொழில், வணிக நிறுவனங்கள் என எதில் வேண்டுமானலும் பணியாற்றலாம். 

🔹 சி.எம்.ஏ. எனும் Cost and Management Accountancy (CMA): 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம், டிகிரி முடித்தவர்களுக்கும் இதில் சேர்ந்து பயில முடியும். 3-4 வருட கால அளவை கொண்ட இந்த படிப்பை முடிக்கும் பட்சத்தில் ரூ.5 லட்சத்தில் இருந்து ஊதியமாக பெற முடியும். வேலை வாய்ப்பு: பினான்ஸ் மேனேஜர், பினான்ஷியல் அனலைசிஸ்ட், பினான்ஷியல் ரிஸ்க் மேனேஜர், பினான்ஷியல் கன்ரோலர், காஸ்ட் கன்ரோலர், காஸ்ட் அக்கெளண்ட் போன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

🔹 சி.எஸ். - கம்பெனி செக்ரடரிசிப் (Company secretary (CS)): 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம், டிகிரி முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயிலலாம். விதிமுறைகள் உண்டு. இதற்கான கால அளவு 3 ஆண்டு, சில பயிற்சி முறைகள் உண்டு. இதை முடிக்கும் பட்சத்தில் ரூ.4-5 லட்சம் வரை ஊதியமாக பெற முடியும். வேலை வாய்ப்பு: இன் ஹவுஸ் லீகல் எக்ஸ்பேர்ட், பெரிய, பெரிய நிறுவனங்களில் போர்டு ஆப் தி டிரைக்டர்களுக்கு சீப் அட்வைஸராக பணியாற்றலாம், கார்பரேட் பிளானர், ஸ்ரேட்டர்ஜிக் பிளானர். போன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

🔹 இன்டெர்நேஷனல் கோர்ஸ்: சி.எப்.ஏ,, ஏ.சி.சி.ஏ., சி.பி.ஏ., சி.எம்.ஏ.,(யுஎஸ்), சி.ஐ.ஏ., போன்ற பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. இவைகளை +2 முடித்தும், டிகிரி முடித்தும் விண்ணப்பிக்க முடியும். வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்ற இந்த வகையான படிப்புகள் உதவி புரிகின்றன இவை பொதுவாக நீண்டகால படிப்புகள் இவை குறித்து வரும் பகுதியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment