PTA மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 மாத ஊதியம் வழங்கத் தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 16 May 2022

PTA மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 மாத ஊதியம் வழங்கத் தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள், சென்னை - 600006 ந.க. எண். 050373 /டபிள்யு.3/இ3/2021 நாள்.13.05.2022 

பொருள்: 

பள்ளிக்கல்வித் துறை - மேல்நிலைக் கல்வி -2021-2022ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 5 மாத காலங்களுக்கு பெற்றோர் கழகம் மூலம் ரூ.10,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட்டு பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022க்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம் மற்றும் பணிபுரிபவர் விவரம் கோருதல் சார்பு,

பார்வை: 1. அரசாணை (1டி) எண். 226, பள்ளிக்கல்வித்(பக2(2) துறை, நாள். 24.11.2021. 2. பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண்.050373/டபிள்யு 3/இ3/2021, நாள். 29.09.2021, 30.11.2021, 01.02.2022 மற்றும் 27.04.2022 ஆகிய நாளிட்ட கடிதங்கள். 

பார்வையில் காண் அரசாணையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையில் 2021- 2022ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2774 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மாணவர்கள் கல்வி நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதியான நபர்களை ரூ.10,000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பி கொள்ள அனுமதிக்கப்பட்டு பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்களுக்கு பார்வை 2-ல் உள்ள கடிதத்தின் படி 5 மாதங்களுக்கு தொகுப்பூதிய ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதில் 2021-2022 நிதியாண்டு 31-3-2022 வரை நிறைவுற்றதால் டிசம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை மட்டுமே தொகுப்பூதியம் பெற்று வழங்கப்பட்டது. தற்சமயம் (மார்ச்/ஏப்ரல் - 2022) இரண்டு மாதங்களுக்கு உரிய ஊதியம் பெறப்படாமல் நிலுவை உள்ள காரணத்தால் மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022ம் மாதத்திற்கு பெறப்படவேண்டிய நிலுவை ஊதிய விவரம் மற்றும் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.05.2022 மாலை 4:00 மணிக்குள் இவ்வாணையரக மின்னஞ்சல் முகவரிக்கு (drew3sec@gmail.com) அனுப்பிட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஒம்./ மு.இராமசாமி இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி) பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இணைப்பு படிவம் -1 மற்றும் படிவம் -2







No comments:

Post a Comment