தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கல்விஃபெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை” என நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவைப் பெறுவதில் தொடங்கி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன. 

ஆர்வமும், திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




Post a Comment

Previous Post Next Post

Search here!