SC / ST பிரிவினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு!!!
செய்தி வெளியீடு எண்:783
நாள்: 16.05.2022
செய்தி வெளியீடு 2021-2022 ஆண்டுக்கான சட்டமன்ற
2021-2022-ஆம்
கூட்டத்தொடரில்
மாண்புமிகு ஆளுநர் உரையில் "அரசுத்துறைகளில் காணப்படும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள்
சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பப்படும்"
என்ற அறிவிக்கப்பட்டது.
மாண்புமிகு ஆளுநரின் உரையில் அறிவிக்கப்பட்ட மேற்படி
அறிவிப்பினை செயல்படுத்த, தலைமைச் செயலக துறைகளிடமிருந்து
தொகுதிவாரியாக (Groupwise) உறுதிசெய்யப்பட்டு பெறப்பட்ட
எண்ணிக்கையின் அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8173 இடங்களும்
பழங்குடியினருக்கு 2229 இடங்களும் ஆக மொத்தம் 10402
கண்டறியப்பட்ட குறைவுப் பணியிடங்களை (Shortfall) தமிழ்நாடு
அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 பிரிவு 27(h)ன்படியும்,
உரிய
வழிமுறைகளைப் பின்பற்றியும் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட
துறைகளால், தெரிவு முகமைகள் மூலமாக நிரப்பம் செய்யப்பட வேண்டும் என
அரசாணை (நிலை) எண். 32, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை, நாள் 20.04.2022-இல் ஆணையிடப்பட்டுள்ளது.
அரசு முதன்மைச் செயலாளர்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments:
Post a Comment