ஒரே நாளில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் 20க்கு மாற்றியமைப்பு. - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 16 June 2022

ஒரே நாளில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் 20க்கு மாற்றியமைப்பு.

ஒரே நாளில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் 20க்கு மாற்றியமைப்பு. 


10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 10ம் வகுப்புக்கு நாளையும் (ஜூன் 17), 12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், தேர்வு முடிவுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 20ம் தேதி காலை 9:30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது. 
அரசு தேர்வுத் துறையின், 

tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண் விபரத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 

மேலும், மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண் விபரங்கள், குறுஞ்செய்தி யாகவும் அரசு தேர்வுத் துறையால் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment