12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு என்ற புள்ளி விவரங்களும் வெளியாகி இருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் 89.06 சதவீதம் தேர்ச்சி பதிவாகி இருந்தது.
இது கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு 86.87 சதவீதம், 2018-ம் ஆண்டு 84.6 சதவீதம், 2019-ம் ஆண்டு 84.76 சதவீதம், 2020-ம் ஆண்டு 85.94 சதவீதம் இருந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அரசு பள்ளிகளில் 89.06 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment