13 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர் அரசு பள்ளிகளில் நியமனம்
:
அரசு பள்ளிகளில், 13 ஆயிரம் ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை, ௨௦௨௩ ஏப்., வரை; 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, ௨௦௨௩ பிப்., வரை, பள்ளி மேலாண்மை குழு வழியாக, தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும்.
மதிப்பூதியம்
பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள தகுதியுள்ள நபர்களை, தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் குழுவும், மேலாண்மை குழுவும் இணைந்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம், 7,500 ரூபாய்; பட்டதாரிகளுக்கு மாதம், 1௦ ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியாகவும், பதவி உயர்வின் வழியாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, இந்த தற்காலிக இடங்களை நிரப்ப வேண்டும். இந்த பணிகளை, எவ்வித புகார்களுக்கும் இடமின்றி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment