13,331 இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Thursday, 23 June 2022

13,331 இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள உத்தரவு

13,331 இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-600006 ந.க.எண்.34087 / சி2 /இ2 /2022 நாள். 23 .06.2022 

பொருள்: 

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி 2022-23ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை / அரசு / நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளுதல் -சார்பு. 

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மார்ச்/ஏப்ரல் 2023ல் நடைபெறவுள்ள அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள நிலையில் அவர்களின் நலன் கருதியும், பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயார் செய்வதற்கு ஏதுவாகவும், அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கருதியும் பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது. 

அவ்வாறே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை (எண்ணும் எழுத்தும் என்ற திட்டம்) வெற்றிகரமாக செயல்படுத்த இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை / அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலயாக உள்ள இடைநிலை / பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் எனக் கருதப்படுவதால், இவ்வாண்டு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத் தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கருதியும் இடைநிலை / பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஏற்படாக 1.7.2022 முதல் இடைநிலை / பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு கீழ்க்கண்ட விவரங்களின் அடிப்படையில் நிரப்பி கொள்ள முன்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 


1. தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை ஜீலை 2022 முதல் ஏப்ரல் 2023 முடிய 10 மாதங்களுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜீலை-2022 முதல் பிப்ரவரி-2023 முடிய 8 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர், உயர்/மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யும்போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும். தபிபா 

 2. இவ்வாறு தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500/- பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000/- வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். 

3. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை மட்டுமே தற்காலிகமாக அந்தந்த ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்ற நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நிரப்பி கொள்ளவேண்டும். 

4. தொடர்புடைய இடைநிலை / பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை சம்மந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் கொண்ட குழுவின் மூலம் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நிரப்பிக்கொள்ளவேண்டும். 

5. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை / பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை தற்காலிக அடிப்படையில் இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளதால் அக்காலக்கட்டத்திற்குள் தொடர்புடைய பாடப்பகுதிகள் (Subject Portions) அனைத்தும் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியரால் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்பதோடு இதனை சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். மேலும் இந்நடவடிக்கைகள் பள்ளி பார்வையின்போது தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்படவேண்டும். 


6. இடைநிலை 1 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கான ஒப்புகைச்சீட்டு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரால் பராமரிக்கப்படவேண்டும். இது தணிக்கைக்கு உட்பட்டது ஆகையால் ஒப்புகைச்சீட்டு பள்ளித் தலைமை ஆசிரியரின் முழுக்கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும். 

7. அவ்வாறு பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு மேற்கண்ட காலத்திற்குள் (மாதத்திற்குள்) பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படவேண்டும். 

8. பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அவ்வாறே முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். 

மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து கேட்டுக் முதன்மைக் கல்வி மாவட்ட கொள்ளப்படுகிறார்கள். அலுவலர்களும் 3/டு 

ஆணையர், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்காக .06·22. 

பெறுநர்: 

அனைத்து மாவட்ட முதன்மைக்கீல்வி அலுவலர்கள். நகல்: அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 

No comments:

Post a Comment