தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை
தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
(தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)
சி. ஐ. டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113.

இளங்கலை
காட்சிக்கலை பட்டப் படிப்பிற்கான
மாணவர் சேர்க்கை அறிவிக்கை 2022-2023


2022-2023ஆம் கல்வியாண்டில் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நான்காண்டு கால பட்டப் படிப்பிற்கான
முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Bachelor of Visual Arts (Cinematography)
1. இளங்கலை - காட்சிக்கலை ( ஒளிப்பதிவு)
2. இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை)
3. இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு)
4. இளங்கலை
- Bachelor of Visual Arts (Digital Intermediate)
Bachelor of Visual Arts (Audiography)
- Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்)
5. இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு)
- Bachelor of Visual Arts (Film Editing)
6. இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்)
- Bachelor of Visual Arts (Animation and Visual Effects)
(ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும் தனித்தனியே விண்ணப்பப் படிவம் அனுப்பப்பட வேண்டும்)
வரிசை எண் 1 மற்றும் 2-இல் உள்ள பட்டப் படிப்புகளுக்கு மேல் நிலை (10+2) கல்வித் தேர்ச்சி (இயற்பியல் மற்றும்
வேதியியல்) / சிறப்புப் பாடமாக புகைப்படம் சார்ந்த தொழில் படிப்புகள் / அதற்கு இணையான படிப்புகள் / மின்னியல்
மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப்
படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் ண்டும். வரிசை எண் 3-இல் உள் பட்டப் படிப்பிற்கு மேல் நிலை (10+2) கல்வித்
தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல் / சிறப்புப் பாடமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு
மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் /அதற்கு இணையான படிப்புகள்/ மின்னியல் மற்றும் மின்னணுவியல்
(EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி
பெற்றிருத்தல் வேண்டும். வரிசை எண்- 4 முதல் 6 வரை உள்ள பட்டப் படிப்புகளுக்கு மேல் நிலை (10+2) கல்வியில்
ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல்
தொகுப்பேட்டினை பார்க்கவும்.
சுதந்திரத்திருநாள்.
அமுதப்பெருவிழா
விண்ணப்பப் படிவத்துடன் தகவல் தொகுப்பேட்டை தபால் வாயிலாக பெற விரும்புவோர் 'Principal, Tamil Nadu
Government M.G.R. Film and Television Institute, Tharamani, Chennai - 600113' எனும் பெயரில் ரூ.200/-க்கான வங்கி
வரைவோலையையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த
விண்ணப்பதாரர்கள் மட்டும் சாதி சான்றிதழின் நகலுடன் ரூ.60/-க்கான வங்கி வரைவோலையையும் ஏதேனும் ஒரு வங்கியில்
சென்னையில் மாற்றத் தக்க வகையில் எடுத்து, சென்னையில் வசிப்பவர் எனில் ரூ.30/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டியும்,
வெளியூரில் வசிப்பவர்கள் எனில் ரூ. 47/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் எனில்
ரூ. 71/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட (30 cm x 25 cm) சுயவிலாசமிட்ட உறையுடன் The Principal, Tamil Nadu
Government M.G.R. Film and Television Institute, Tharamani,Chennai-600 113 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பப்
படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மாணவர் சேர்க்கைக்காள விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in_மற்றும்
www.dipr.tn.gov.in எனும் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை
கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவாறு வங்கி வரைவோலையுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள்
பிற வகுப்பைச் சார்ந்தவர்கள்
ரூ.60/- (சாதி சான்றிதழின் நகல் இணைக்கப்பட வேண்டும்)
ரூ.200/-
விண்ணப்பங்கள் பெற நேரில் வர வேண்டாம்
தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனைத்து உரிய
ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
முதல்வர் (பொறுப்பு),
தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம்
மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600 113.
24.06.2022க்கு முன்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
24.06.2022 முதல் 22.07.2022 வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.07.2022 மாலை 5.00 மணிக்குள்.
முதல்வர் (பொறுப்பு)
தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
செ.ம.தொ.இ/617/வரைகலை/2022
சி. ஐ. டி வளாகம், தரமணி, சென்னை - 600 113.
"சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்."

Post a Comment

Previous Post Next Post

Search here!