அனுப்புநர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தமிழ்நாடு
பெறுநர்
மாநில திட்ட இயக்குநர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி.
சென்னை 6.
G
நக.எண்.2541/அ15பநேப:2022 நாள். 16.06.2022
அய்யா அம்மையீர்
பொருள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பகுதி நேரப்பயிற்றுநர் ஜீன் 2022 மாத ஊதியம்
முழுவதுமாக வழங்குவது தொடர்பாக
பார்வை
1 அரசாணை (வாலாயம்) எண்.177 பள்ளிக்கல்வித் துறை நாள்.11 11.2011.
2. பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின்
செயல்முறைகள் ந.க.எண்.019528/எம் இ1/2022 நாள்.11.06.2022.
3. இவ்வியக்கக நக.எண்.1738/அ15/பநேப/2019 நாள்.29.03.2019.
பார்வை (1)இல் காணும் அரசாணைப்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேரப்பயிற்றுநர்கள் ஒரு வாரத்திற்கு 3 அரை நாட்கள் வீதம்
பள்ளிகளில் பணி புரிந்தால் மட்டுமே அம்மாதத்திற்கான முழு ஊதியம் பெற இயலும். ஆனால் 2022
23 ஆம் கல்வியாண்டில் ஜீன் மாதம் 13ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த
மாதத்தில் பள்ளிகளில் 14 நாட்கள் மட்டுமே மொத்த வேலை நாட்களாக உள்ளது.
எனவே 2022-23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி செயல்பாடுகளில்
பகுதி நேரப் பயிற்றுநர்கள் பங்கு கொள்கின்ற நிலையில் ஜீன் 2022 ஆம் மாதத்திற்கு மட்டும் வாரத்தில்
நான்கு அரை நாட்களாக தலைமையாசிரியர்களால் வழங்கப்படும் கால அட்டவணையைப்
பின்பற்றியும், பகுதி நேரப்பயிற்றுநர்களை மாணவர்களின் நலன் கருதி பணிகளில் ஈடுபடுத்தியும் ஜீன்
மாதம் முழு ஊதியம் வழங்கலாம்.
பகுதி நேர பயிற்றுநர்கள் பணியாற்றாத நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்து வழங்கப்படும்
என்பதால். விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்க இயலாது. எனவே உரிய அறிவுரைகளைப்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment