2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் L.K.G மற்றும் U.K.G வகுப்புகள் 2022-23ஆம் கல்வியாண்டு செயல்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக : தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search here!

Thursday, 30 June 2022

2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் L.K.G மற்றும் U.K.G வகுப்புகள் 2022-23ஆம் கல்வியாண்டு செயல்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக : தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் L.K.G மற்றும் U.K.G வகுப்புகள் 2022-23ஆம் கல்வியாண்டு செயல்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக  : தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6, ந.க.எண். 011899 / கே3 / 2022, 

பொருள் : 

நாள்: 28.06.2022. தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் L.K.G மற்றும் U.K.G வகுப்புகள் 2022-23ஆம் கல்வியாண்டு செயல்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. 

பார்வை :

அரசாணை (நிலை) எண்.89, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (எஸ்.டபிள்யு-7(1)}த் துறை, நாள்.11.12.2018 

பார்வையில் காணும் அரசாணையின்படி, அரசு / ஊரட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

2,381 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் L.K.G / U.K.G மாணவர்களுக்கான கற்றல் - கற்பித்தல் பணிகளை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப் பணி மற்றும் பணி மாறுதல் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், புதிதாக அமைந்த தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கையின் விளைவாக, குறிப்பாக 2021 மே மாதத்திற்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, பள்ளிகள் பாதுகாப்பாக திறக்கப்பட்டப் பின்னர் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேல் புதிதாக மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதில் 1-5 வகுப்புகளில் மட்டும் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்து கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
எனவே, LK.G / U.K.G வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை, 1-5 வகுப்புகளை கையாளுவதற்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கொண்டு தொடக்கப் பள்ளிகளில் மீள தேவைப்படும் சூழலைக் கருத்தில் பணியமர்த்தப்பட்டனர். 

எனவே, அரசாணை (நிலை) எண்.89, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (எஸ்.டபிள்யு-7(1)த் துறை, நாள்.11.12.2018-ன்படி, ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்ற L.K.G மற்றும் U.K.G வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 
இவ்வாறு தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை, சிறப்பாசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு அரசின் ஆணை பெறப்பட்டு செயல்படுத்தப்படும் வரை தொடர்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி, மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ளுவற்காக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. 
தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான L.K.G மற்றும் U.K.G வகுப்பு மாணவர் சேர்க்கை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே தலைமை ஆசிரியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

தொடர்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தற்போது அங்கன்வாடியில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகியோரின் உதவியுடன் சேர்க்கை பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 

3+ வயதுடைய குழந்தைகள் அனைவரையும் L.K.G-யிலும் 4+ வயதுடைய குழந்தைகள் அனைவரையும் U.K.G-யிலும் சேர்த்திட ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. 2

*பிற குழந்தைகள் அங்கன்வாடி மையக் குழந்தைகளாக அந்தப் பணியாளர்களால் பராமரிக்கப்பட வேண்டும். 

ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் L.K.G மற்றும் U.K.G வகுப்புகளில் புதிதாக சேர்க்கையாகும் மாணவர் விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்திட வேண்டும். 
ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் L.K.G மற்றும் U.K.G வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள வளங்களை பயன்படுத்தி தற்போது கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 

தற்போது அங்கன்வாடியில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வர வேண்டும். 

அங்கன்வாடி மையம் செயல்படும் பணி நேரம் வரையில் L.K.G / U.K.G வகுப்புகளில் சேர்க்கையான மாணவர்கள் கல்வி பயில்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். 

பெற்றோர்கள் எளிதில் அணுகும் வகையிலும் அவர்களின் ஐயங்களுக்கு உடனடியாக விளக்கம் அளித்திடும் வகையிலும் தலைமை ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும். 

பல்வேறு முக்கிய அலுவலர்கள் / அலுவலகங்களின் தொடர்பு எண்களை பெற்றோர்களின் பார்வைக்கு தெரியும் வகையில் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும். 

ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் L.K.G மற்றும் U.K.G வகுப்புகளில் சேர்க்கையாகி கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பு 3  முழுமையும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சாரும். 

பள்ளிகளில் ஏற்கனவே கூடுதல் வகுப்பறைகள் இருப்பின் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். 

கூடுதல் வகுப்பறை இல்லாத பள்ளிகள் தற்காலிகமாக அங்கன்வாடி மையங்களையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கூடுதல் வகுப்பறை தேவை, கழிப்பறை வசதி தேவை போன்றவற்றை தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக தொகுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இந்த குழந்தைகளுக்கு தற்போது அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துணவு அளிக்கப்படல் வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணியாளர் பற்றாக்குறை இருப்பின் மாவட்ட ஆட்சியரை அணுகி தேவைப்படும் பணியாளரை உடன் மாற்றுப் பணியில் நியமித்திட வேண்டும். 

இவையனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுதல் அவசியம். 

மேற்குறிப்பிட்ட விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் 78{6m முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக 

நகல் – 

அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-9 ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6 மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6 இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், சென்னை - 113 4 தகவலுக்காக பணிந்து அனுப்பலாகிறது DOWNLOAD FULL PROCEEDINGS HERE

No comments:

Post a Comment