3,552 இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான அறிவிப்பு இன்று வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 30 June 2022

3,552 இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான அறிவிப்பு இன்று வெளியீடு

3,552 இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான அறிவிப்பு இன்று வெளியீடு 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின், பொதுத்தேர்வு 2022-க்கான 3,552 இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை 30-ந் தேதி (இன்று) வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. 


விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜூலை 7-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வானது காவலர் பொதுத்தேர்வு 2022-ல் நடத்தப்பட இருக்கிறது. இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தெளிவுகளுக்காக வாரியத்தின் கட்டுப்பாட்டு அறை, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. 


இவற்றை ஜூலை 7-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை அலுவலக பணி நேரத்தில் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான கூடுதல் விவரங்களை வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறையை 044-40016200, 28413658 மற்றும் 9499008445, 9176243899 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment