என்ஜினீயரிங் படிப்பில் சேர 49 ஆயிரம் பேர் விண்ணப்பம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 23 June 2022

என்ஜினீயரிங் படிப்பில் சேர 49 ஆயிரம் பேர் விண்ணப்பம்

என்ஜினீயரிங் படிப்பில் சேர 49 ஆயிரம் பேர் விண்ணப்பம் தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தி அதனை தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 3-வது நாளான நேற்றைய நிலவரப்படி, 48 ஆயிரத்து 955 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்து 438 பேர் கட்டணத்தை செலுத்தி இருக்கின்றனர். 4 ஆயிரத்து 403 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

No comments:

Post a Comment