என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 1 June 2022

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்?

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? 2022-23-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவல்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) நேற்று அட்டவணையாக வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- என்ஜினீயரிங் உள்பட தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். 

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 10-ந்தேதிக்குள் தொடங்க வேண்டும். முதலாம் ஆண்டில் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்து முழு கட்டணத்துடன் மாணவர்கள் திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதேபோல், காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 25-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். அதேபோல் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையை அக்டோபர் 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். மேற்சொன்ன இந்த அட்டவணை முதுநிலை டிப்ளமோ படிப்புகள், முதுநிலை சான்றிதழ் படிப்புகளுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment