ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் திட்டம் ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் வகையில் தமிழக அரசு தபால்துறை வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. வாழ்நாள் சான்றிதழ் மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடாந்திர நேர்காணலுக்காக சமர்ப்பிக்கின்றனர். 

 தற்போது​ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாக சென்று பதிவு செய்தல், தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல், மின்னணு விரல்ரேகை சாதனத்தை பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு நடைமுறையை ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பின்பற்றி வருகின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு வருடாந்திர நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டை பொறுத்தமட்டில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வருடாந்திர நேர்காணல் நடைபெற உள்ளது. 

 ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயதினை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு தபால்துறை வங்கி மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை பெற தமிழக அரசு தபால் துறை வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.70 கட்டணம் மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ஒரு நபருக்கு ரூ.70 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், தபால்துறை வங்கியின் தலைமை பொதுமேலாளர் குருசண்ராய் பன்சால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!