தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.40293/அ1/இ1/2022 நாள்: 09.06.2022 

பொருள்: 

பயிற்சி- முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 19.06.2022 முதல் 21.06.2022 வரை மற்றும் 22.06.2022 முதல் 25.06.2022 வரை நடைபெறுதல் - சார்பு- 

பார்வை: 

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற பேரவை. - மானியக் கோரிக்கை 2022-23 

பார்வையில் கண்டுள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை மானிய கோரிக்கைகள் அறிவிப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் என சுமார் 12000 பேருக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி(Residential Training) அளிக்கப்படும்" மேற்கண்ட அறிவிப்பின்படி பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ துணை இயக்குநர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி 19.06.2022 முதல் 21.06.2022 வரை மூன்று நாட்களும், அதனைத் தொடர்ந்து 22.06.2022 முதல் 25.06.2022 வரை முதன்மைக்கல்வி அலுவலர்கள்/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்/உதவி இயக்குநர்களுக்கு எண்ணும் எழுத்தும், கற்றல் விளைவுகள், தேசிய அடைவுத் தேர்வு பகுப்பாய்வு, கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை மற்றும் பள்ளிப் பார்வை உள்ளிட்ட தலைப்புகளில் இணைப்பில் உள்ள கால அட்டவணையின்படி பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சி மதுரை தேனி சாலையில் அமைந்துள்ள பில்லர் ஹால் மையத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ துணை இயக்குநர்கள் பயிற்சி துவங்குவதற்கு முதல் நாள் 18.06.2022 அன்று இரவு 8.00 மணிக்கு முன்னதாகவும், மாவட்டக்கல்வி அலுவலர்கள்/உதவி இயக்குநர்கள் 21.06.2022 அன்று இரவு 8.00 மணிக்குள் பயிற்சி மையத்திற்கு வந்து சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அனைத்து அலுவலர்களும் பயிற்சிக்கு வரும் போது உடன் மடிகணினி (laptop)கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான செலவினங்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறும், பயிற்சிக்கு ஆகும் செலவினத்தை தலைப்புகள் வாரியாகத் தொகுத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அளித்திடுமாறும் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.





Post a Comment

Previous Post Next Post

Search here!