தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய ‘வெயிட்டேஜ்’ கால அளவுக்கான உத்தரவை அரசு வெளியிட்டு உள்ளது.
முன்பிருந்த ‘வெயிட்டேஜ்’
இது குறித்து மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59 ஆக இருந்தபோது, ஒருவர் 54 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுக்கு உள்ளாக விருப்ப ஓய்வு பெற்றால், அவருக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக ‘வெயிட்டேஜ்’ கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் (59 வயதில் கிடைக்கக் கூடிய ஓய்வூதியம்) வழங்கப்பட்டு வந்தது.
எவ்வளவு ‘வெயிட்டேஜ்’?
தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், முன்பு 54 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்த வயது, 55 என்று நிர்ணயிக்கப்படுகிறது.
55 வயதுக்கும் குறைவாக பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால் அவருக்கு 5 ஆண்டுகள் பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.
அதேபோல, விருப்ப ஓய்வு பெறும் வயது 56 என்றால் அவருக்கு 4 ஆண்டுகளும்; 57 வயது என்றால் 3 ஆண்டுகளும்; 58 வயது என்றால் 2 ஆண்டுகளும், 59 வயது என்றால் 1 ஆண்டும் வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
‘வெயிட்டேஜ்’ ஆக கொடுக்கப்படும் ஆண்டுகளுக்கு மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது. மேலும், 2003-ம் ஆண்டுக்கு முன்பதாக (பழைய ஓய்வூதிய காலகட்டம்) அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவு பொருந்தும்.
No comments:
Post a Comment