துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து தேர்வு நாட்களுக்கு மட்டும் விலக்களித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 June 2022

துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து தேர்வு நாட்களுக்கு மட்டும் விலக்களித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து தேர்வு நாட்களுக்கு மட்டும் விலக்களித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! 

அனுப்புநர் 
திரு சா சேதுராமவர்மா, 
அரசுத் தேர்வுகள் இயக்குநர் DPI வளாகம், 
சென்னை-600006. 

அம்மையீர் ஐயா, 

பெறுநர் 
முதன்மைக்கல்வி அலுவலர்கள், 
முதன்மைக்கல்வி அலுவலகம், 
அனைத்து மாவட்டங்கள். நாள். 06.06.2022 பொருள்: சென்னை-6,
அரசுத் தேர்வுகள் இயக்ககம் . 

பொதுத் தேர்வுகள். மே-2022 துறைத்தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து தேர்வெழுதவுள்ள நாள்/நாட்களுக்கு மட்டும் விலக்களித்தல் சார்பு 

2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி பல்வேறு முகாம்களில் தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் துறைத்தேர்வுகளை ஆசிரியர்கள் பலர் எழுதவுள்ளதால் இத்தேர்வினை எழுதுவதற்கு வசதியாக விடைத்தாள் திருத்தும் முகாம்களில் துறைத்தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களது தேர்வுக்கூட நுழைவுச்ச்சீட்டு வாயிலாக உறுதி செய்துக்கொண்டு அவ்வாசிரியர்கள் தேர்வெழுதவுள்ள நாள் / நாட்களுக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்களிக்கும் வகையில் உரிய அறிவுரையினை முதன்மைக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட முகாம் அலுவலர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


ஒம்/- இயக்குநர் நகல்: பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,பள்ளிக்கல்வித்துறை, சென்னை-6 ந.க.எண்.004119/ எச்-2/2022

No comments:

Post a Comment