நம்முடைய கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 June 2022

நம்முடைய கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

நம்முடைய கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் நம்முடைய கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கண் மிக முக்கியமான உறுப்பு. இது பாதிக்கப்பட்டால் வாழ்க்கை மிகவும் கஷ்டமாகி விடும். ஆனால் இன்று எல்லோருக்கும் பார்வைத் திறன் குறைந்து வருகிறது. இதனை ஓரளவு சரிசெய்ய இந்த சிகிச்சை முறைகள் உதவும். இது சிறந்த இயற்கை மருத்துவமாகும். கண்களை கழுவுதல்  

குளிர்ந்த சுத்தமான குடிதண்ணீரைக் கண் கிண்ணத்தில் வழிய வழிய நிரப்பிக் கொள்ளவும். தலையைக் குனிந்து கொண்டு விழித்து கண் கிண்ணத்தினுள் கண்ணைப் பொருத்தவும். இப்போது கண் விழி நீரினுள் மூழ்கி இருக்கும். கண் விழியினை உருட்டவும். இமையை லேசாக மூடித் திறக்கவும். பல முறை இவ்வாறு செய்யவும். அடுத்த கண்ணுக்கும் இவ்வாறே செய்யவும். 

கண் எரிச்சலாக இருக்கும்போது செய்யலாம். சினிமா பார்த்துவந்த உடனே செய்யலாம். டிவி பார்த்த பின்பு செய்வது நல்லது. மிக அவசியம் என்றுதான் கூறவேண்டும். சமையல் புகை, தாளித்த புகையின் கெடுதலைத் தவிர்க்க சமையலறையில் வைத்து கண் கழுவி விடுதல் பெண்களுக்குப் பெரும் உதவியாகும். 

கண் கழுவ உபயோகிக்கப்படும் தண்ணீர் குளிர்ச்சியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். துணியில் வடிகட்டிக் கொள்வது நல்லது. இந்த நீரில் ரோஜாப் பூ ஒன்றைப் போட்டு ஒரு மணிநேரம் வைத்திருந்து வடித்துப் பயன்படுத்தினால் மிக நல்லது. சூரிய ஒளிச் சிகிச்சை 

காலையில் 6 மணி முதல் 9 மணி வரை நேரங்களில், சூரியனை நோக்கிக் கண்களை மூடி நிற்க வேண்டும் இமைகளின்மேல் சூரிய ஒளி படல் வேண்டும். இதனை 2 முதல் 5 நிமிடங்கள் செய்யலாம். இந்த சூரிய ஒளிச்சிகிச்சை கண்களின் ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது. 

களைப்புற்ற கண்களைச் சற்று நேரம் மூடிக் கொண்டிருந்து திறந்து பார்த்தால் பார்வை தெளிவையும், கண்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியையும் உணரலாம். கண்களை மூடிக் கொள்ளும் பொழுது உட்புகும் சிறிய ஒளியையும் தடுத்தால் கண்களுக்கு புத்துணர்ச்சி அதிகமாவதை உணரலாம். 

நீராவிப் பயிற்சி 

நீரை ஆவி வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும். சில சொட்டுகள் நீலகிரித் தைலத்தையும் இதில் சேர்க்க வேண்டும். கண்களை இமைத்துக் கொண்டும், மூச்சை நன்றாக உள்ளிழுத்தும், வெளிவிட்டும் இந்த ஆவியை முகர்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்தொற்று நோய்கள் வருவது தவிர்க்கப்பட வாய்ப்புகள் உண்டு. அதிகாலையில் எழுதல் 

சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும் அதிகாலையில் எழுவதால் கண் ஒரே சீராக அதிகரிக்கும் ஒளியைப் பெறுகிறது. இதனால் கண் கெடுவதில்லை. நீண்ட நாள் நன்கு உழைக்கிறது. 

நேரங்கழித்து எழுவதால் கண்ணில் திடீரென்று பிரகாசமான ஒளி பாய்கிறது. அதனால் கண்ணின் நுண்ணிய உறுப்புகள் அதிர்ச்சியடைகின்றன. கண் சீக்கிரம் கெட்டு விடுகிறது. இதனாலேயே முன்னோர் அதிகாலையில் எழுவதை வற்புறுத்திக் கூறி வந்திருக்கின்றனர்

No comments:

Post a Comment