எது எனக்கான டயட்...
மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவு...
நட்ஸ் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இதில் செலினியம் இருப்பதால் மனநிலையை சரி செய்யும். ஒரு நாளைக்கு எண்ணிக்கையில் 7 வரை நட்ஸ் சாப்பிடலாம். மீன் புரதச்சத்து கொண்டது. ஒமேகா 3 ஃபேட்டி அமிலமும் உள்ளது. இது மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும். முட்டையில் வைட்டமின் டி உள்ளது. புரதச்சத்து மற்றும் Tryptophan இது Serotonin உற்பத்தி செய்யும். இதனால் மன அழுத்தம், கோபம் இருக்காது. நல்ல தூக்கம் வரும். டார்க் சாக்லேட் ஒருநாளைக்கு ஒரு துண்டு சாப்பிட்டால் மன அழுத்தம் இருக்காது.
டார்க் சாக்லெட் இதயத்திற்கும் நல்லது.
Shift workers...
ஷிஃப்ட் இரவு, பகல் என மாறும்போது அதற்கேற்ற உணவு சாப்பிடுவது அவசியம். இரவு நேரங்களில் வேலை செய்யும்போது தூக்கம் வந்தால் சூடாக சூப், தேநீர் போன்றவற்றைப் பருகலாம். அதேசமயம் இரவு வேலைக்கு வருவதற்கு முன்பு நன்றாக தூங்கி இருக்க வேண்டும். தூக்கத்தைக் காரணம் காட்டாமல் மூன்று வேளை உணவை கட்டாயமாக சாப்பிட வேண்டும். நடுவில் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும். தண்ணீர் பருக வேண்டும்.
வேலையில் டென்ஷன் அதிகம் என்று புகைபிடிப்பது, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் சேரும்போது ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதும் வாய்ப்பு அதிகமாகும். அந்த நேரத்தில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை கவனமாகத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து குறைந்த, புரதம் அதிகம் உள்ள உணவை சாப்பிடவும். வைட்டமின்கள், கனிமங்கள் உள்ள உணவை சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள்...
கர்ப்ப காலத்தில் வேலைக்குச் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவை அதிகமாக சாப்பிட வேண்டும். கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், தானியங்கள், பயிர் வகைகள், கீரை, மீன் முட்டை, நட்ஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டும். நேரத்திற்கு மாத்திரை போட வேண்டும்.
குழந்தை பெற்ற பெண்கள்...
2 வயது வரை குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தாய்ப்பாலை பாட்டிலில் ஸ்டோர் பண்ணி வீட்டில் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம். பால் சுரப்பதற்கு ஏற்ற பூண்டு, எள்ளு, கீரை, ஓட்ஸ், நட்ஸ், கடலை, விதைகள், பழங்கள், காய்கறிகள், மீன், கறி, முட்டை போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்
மெனோபாஸுக்குப் பிறகான பெண்களுக்கு...
இரும்புச்சத்து நிறைந்த கீரை, முட்டை, மீன், கறி, நட்ஸ் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து உள்ள தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தண்ணீர் நன்றாக குடித்து உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ளவும்.
உடல் பருமன் உள்ளவர்கள்...
உடல் பருமன் இருக்கிறவர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது. அதற்கு மாற்றாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடலாம். ஜங்க் ஃபுட்ஸ், பொரித்த உணவுகள், குளிர்பானங்கள், கெட்ட கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். நல்ல தண்ணீர், Green tea, சூப், மோர் குடிக்கவும். காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவை சாப்பிடவும். உடற்பயிற்சி கட்டாயமாக செய்ய வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்...
இவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும். அதற்கு நடுவில் ஹெல்த்தி ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்.
இல்லையென்றால் மதிய உணவு நிறைய சாப்பிட்டு விடுவார்கள். முடிந்தவரை வெந்தய தண்ணீர், பாகற்காய் ஜூஸ் இடைப்பட்ட வேளையில் குடிக்கவும். சர்க்கரை உணவுகள் தவிர்க்கவும். மாவுச்சத்து குறைவாக எடுத்துக் கொள்ளவும்.
இதய நோய் உள்ளவர்கள்...
கெட்ட கொழுப்புள்ள நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் போன்ற உணவுகளை தவிர்த்து, நல்ல கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டையின் பொடியை ஒரு தேக்கரண்டி தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.
🍁 வாழ்க வளமுடன் 🍁
No comments:
Post a Comment