பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 23 June 2022

பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி தெரிவித்தார். 

 2 லட்சம் மாணவர்கள் 

திருச்சியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் நடப்பாண்டு அரசுப் பள்ளியில் இதுவரை சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இந்த வருடம் அந்த இலக்கை அடையும் சூழல் உள்ளது. பள்ளி கட்டிடங்கள் பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சொல்லி இருக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள் இந்த பள்ளிக்கூடங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment