ஒல்லி உடல் சம்பந்தமில்லா தொப்பை ஏன்? - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 June 2022

ஒல்லி உடல் சம்பந்தமில்லா தொப்பை ஏன்?

ஒல்லி உடல் சம்பந்தமில்லா தொப்பை ஏன்?


இன்று உள்ள நிறைய ஆண்களுக்கு பிரச்சனை என்னவென்றால் உடற்பகுதி ஓரளவு சரியான அளவில் இருக்கும். ஆனால் தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும். இவர்களுக்கு கழிவும், கெட்டநீரும் உடலில் சேர்ந்திருக்கிறது என்று அர்த்தம். இவர்கள் தங்கள் உடற்கழிவுகளை வெளியேற்றி சரியான உடல் எடையை அடைய துணை உணவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் சரியான ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற முடியும். 

தொப்பையை மட்டும் குறைக்க முடியுமா? 

தொப்பையை குறைக்க தனியாக எந்த மருந்தும் கிடையாது. வாழ்வியல் மாற்றங்கள் மூலம் நம் தொப்பையை எளிதாக குறைத்து கச்சிதமாக மாற்ற முடியும். அதற்கு, சரியான அளவில் உடற்பயிற்சியும் சரியான உணவு முறையையும் கடைபிடிக்க வேண்டும். ஆனால், உடற்பயிற்சி மற்றும் உணவு  கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுதும் தொப்பை பகுதியில் உள்ள கொழுப்புகள் மட்டும் கரைவதில்லை. 

READ THIS ALSO

ஒட்டுமொத்தமாக உடலில் உள்ள அனைத்து பகுதியிலும் உள்ள கொழுப்புகளும், உடல் எடையும் குறைய ஆரம்பிக்கிறது. அதோடு சேர்ந்து தொப்பையும் லேசாக குறைய ஆரம்பிக்கிறது. 

தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க அறுவை சிகிச்சை முறையும் இருக்கிறது. ஆனால், இந்த அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன.  


ஆகையால் சரியான வழியில் உடற்பயிற்சியும் சரியான உணவு கட்டுப்பாடும் பின்பற்றினால் தொப்பையில் உள்ள கொழுப்பை மட்டும் குறைத்து, அழகான வயிற்றுப் பகுதியை பெற முடியும். 

உணவை தவிர்க்கக் கூடாது 

உடல் எடை குறைக்கும் பயிற்சியில் ஈடுபடும் போது, சரியான உணவு வகைகளை எடுப்பது மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. 

பலபேர் உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது முற்றிலுமாக உணவை தவிர்த்து விடுவார்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் குறைவு ஏற்பட்டு கலோரிகளை குறைப்பதற்கு முடியாமல் போய்விடும். 

கலோரிகள் வேகமாக கரைய வேண்டும் என்றால் மெட்டபாலிசம் மிகவும் முக்கியம். இல்லை என்றால் நாம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் கலோரிகள் குறையாமல் நின்று விடும். எனவே மெட்டபாலிசம் கிடைக்கக்கூடிய உணவு வகைகளை நாம் சாப்பிடுவது அவசியமாக உள்ளது. 

உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் 

அன்றாட உணவிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் செய்தால் தொப்பையை குறைக்க முடியும். 

√ அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு நன்மை தரக்கூடியது அதனால் பைனாப்பிள், பலாப்பழம், மாம்பழம், போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. இதில் அதிகமான சர்க்கரை இருக்கிறது. 

√ தினமும் உணவில் ஒரு கப் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களை தோலுடன் சாப்பிடுவது உகந்தது. 

* பழங்களின் தோல், வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளும். ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப்பாக இருப்பதற்காக தோலில் மெழுகு பூசப்படும். அதனால் அவற்றை சாப்பிடுவதற்கு முன் 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட வெதுவெதுப்பான நீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி சாப்பிடலாம். 

√ தினமும் ஒருமுறை கிரீன் டீ குடிப்பது, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பது, பிராணாயாமம் செய்வதும் வயிற்று கொழுப்பை நீக்க உதவும். 

√ 30% ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டும் 20% பழங்கள் மற்றும் காய்கறிகளும், 10% பால் மற்றும் இறைச்சி வகைகளும் சாப்பிட்டு வரவேண்டும். 

* பால் மற்றும் இறைச்சி வகைகளில் அதிகமான புரோட்டீன் இருக்கிறது. எனவே சரியான விகிதம் அனைத்தையும் சாப்பிட்டு வரவேண்டும். 

* 30 சதவிகிதம் கார்போஹைட்ரேட் எனப்படுவது ஓட்ஸ், சிகப்பரிசி, மற்றும் நியூட்ரிஷன்கள் அதிகமாக உள்ள தானிய வகைகள் ஆகும். 

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கணக்குத் தெரியாமல் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பிற்கு பெரும் காரணமாக அமைகிறது. 

உடற்பயிற்சி 

சாதாரண நாற்காலியில் நேராக அமர்ந்து, கைப்பிடிகளை பிடித்தபடி, கால்களை ஒரு பத்துமுறை மேலே தூக்கி, கீழிறக்க வேண்டும். இந்த பயிற்சியும் வயிற்று கொழுப்பை குறைக்கும். 

ஒரு நாளில், குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது நடக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் நடப்பதைவிட ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் இடைவெளிவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம். 

அதுவே, இரவில் சாப்பிட்ட பிறகு, ஒன்றரை மணி நேரம் இடைவெளிவிட்டு நடக்கலாம். இப்படி செய்தால் வயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்க முடியும்.

No comments:

Post a Comment