தமிழக மாணவர்கள் உலக சாதனை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 14 June 2022

தமிழக மாணவர்கள் உலக சாதனை

கடந்த 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் நடந்த‘ ரீடிங் மாரத்தான்’ என்ற தொடர் வாசிப்பு போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்தினார். 
இத்திட்டம் தற்போது தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 1 லட்சத்து 81 ஆயிரத்து இல்லம் தேடி கல்வி மையங்களில் கோடை விடுமுறை காலத்தில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 12 நாட்கள் ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்பு போட்டி நடந்தது. அதில், தமிழ்நாடு அரசு கூகுள் நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, கூகுள் ‘ரீடிங் அலாங்க்’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் இயங்கும் செல்போன் செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை தமிழ்நாட்டு மாணவர்கள் வாசித்துள்ளனர். 
வாசிப்பு பழக்கத்தை தூண்டும் இந்த நிகழ்வில் 18 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த 12 நாட்களில் 263.17 கோடி சொற்களை சரியாக வாசித்து சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தைகள் 9 லட்சத்து 82 ஆயிரம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்துள்ளனர். மேலும் 413 வட்டாரங்களுக்கு இடையே நடந்த போட்டியில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62 லட்சத்து 82 ஆயிரம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் 49 லட்சத்து 19 ஆயிரம் சொற்களையும், மேலூர் வட்டாரம் 41 லட்சத்து 72 ஆயிரம் சொற்களையும் சரியாக வாசித்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. 

Tamil Nadu students have set a world record in the 'Reading Marathon', a series of reading competitions held at home-based education centers from the 1st to the 12th of last month. Tamil Nadu Chief Minister MK Stalin searched the house and implemented an education program so that the education of students would not be affected as schools were closed during the Corona epidemic. The project is currently working well in Tamil Nadu. This was followed by a 12-day Reading Marathon, a series of reading competitions to encourage students to read during the summer holidays at educational centers in search of 1 lakh 81 thousand homes. 

 In it, Tamil Nadu students read stories to children through a cell phone processor running on Google's 'Reading Along' artificial intelligence technology, according to a memorandum of understanding made by the Tamil Nadu government with Google. 18 lakh 36 thousand students enthusiastically participated in this event which stimulates reading habits. Tamil Nadu students have achieved a record reading of 263.17 crore words correctly in the last 12 days. Children from Tamil Nadu read 9 lakh 82 thousand hours and hundreds of stories in this event. In the competition held between 413 circles, Lalgudi area of ​​Trichy district has won the first place by reading 62 lakh 82 thousand words correctly. Madurai district Alankanallur area 49 lakh 19 thousand words and Melur area 41 lakh 72 thousand words correctly read second and third place.

No comments:

Post a Comment