கருவளையங்களை போக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் : - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 June 2022

கருவளையங்களை போக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் :

கருவளையங்களை போக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் 

💛குளிர்ச்சியான டீ பேக் சிகிச்சை :

குளிர்ச்சியான தேநீர் பைகள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களையும் நீக்கும். தேநீர் பையை தண்ணீரில் ஊறவைத்து, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதன் பிறகு கண்களை மூடி அந்த டீ பேக்கை கருவளையத்தில் வைக்கவும். 

💛 உருளைக்கிழங்கு :

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு கருவளையம் உள்ள சரும பகுதியில் தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவவும்.  

💛 தக்காளி :

கருவளையங்களை போக்குவதில் தக்காளி ஒரு சஞ்சீவி போல்  சருமத்தை மென்மையாக்குகிறது. ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து , கருவளையங்கள் மீது தடவி 10 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் கழுவவும். 


💛குளிந்த பால் சிகிச்சை :

 குளிர்ந்த பாலை பருத்தி துணியில் ஊறவைத்து, கண்களின் கருவளையத்தில் வைக்கவும். 

💛 ஆரஞ்சு சாறு :
. ஆரஞ்சு சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள் பயன்படுத்துவதன் மூலம், கருவளையங்கள் படிப்படியாக குறையும். 

🎈🧸🎈

No comments:

Post a Comment