தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் வரும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வெளியிட்டது. மொத்தம் 16 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புக்கு, 3 ஆயிரத்து 544 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

அவர்களில் 3 ஆயிரத்து 539 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதுவரையில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தி வந்த தேர்வுகள் அனைத்தும் காகித வடிவிலான எழுத்துத் தேர்வாகவே இருந்தது. இந்த நிலையில் முதல் முயற்சியாக கணினி வழித்தேர்வை டி.என்.பி.எஸ்.சி. கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே துறை சார்ந்த தேர்வுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது நேரடி தேர்வுகளிலும் இதை பின்பற்ற தொடங்கியுள்ளது. இது பின்வரும் காலங்களில் அனைத்து தேர்வுகளுக்கும் விரிவுப்படுத்தவும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு இருக்கிறது. 

 அந்த வகையில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2-வது தாளும் என 2 தாள்களாக தேர்வு நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றதாக கூறப்பட்டது. அதன்படி, 16 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!