சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 2 June 2022

சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு

சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

 தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தில் 1.1.2021 முதல் 31.12.2021 வரை தமிழில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை) உள்ளிட்ட 33 பிரிவுகளின் கீழ் நூல்கள் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரம், பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும். போட்டிக்கான விண்ணப்பத்தை www.tamilvalarchithurai.comஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும், போட்டி கட்டணமாக ரூ.100-ம் ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை' என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை, ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment