2022-23-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக படிக்கும் மாணவர்களிடம் ரூ.200 தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
அதன்படி, அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக படிக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கருத்துருவை ஏற்று, மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக்கட்டணம் ரூ.200-ஐ 2022-23-ம் கல்வியாண்டு முதல் முழுமையாக ரத்து செய்து ஆணையிடப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment