சென்னை ஐஐடி பேராசிரியர் தளப்பில் பிரதீப் தலைமையிலான குழு, தூய நீர் குறித்த நவீன கண்டிபிடிப்பிற்கு ‘திருப்புமுனை கண்டுபிடிப்பு’க்காக வழங்கப்படும் சர்வதேச விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
பேராசிரியர் பிரதீப்பின் ஆராய்ச்சிக் குழு, குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை மலிவு, நிலையான மற்றும் விரைவாக அகற்றுவதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘வாட்டர் பாசிட்டிவ்’ நானோ அளவிலான பொருட்களை உருவாக்கியது. இந்த கண்டுபிடிப்பானது, ‘பிரின்ஸ் சுல்தான் பின் அப்துல்லாஜிஸ் இன்டர்நேஷனல் பிரைஸ் ஃபார் வாட்டர்’ எனும் சிறந்த படைப்பாற்றல் விருதின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள வழிகளில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்கும் முன்னோடி பணிகளுக்காக இது அங்கீகாரம் அளிக்கிறது. வருகிற செப்.12ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!